fundamentalist movements
அடிப்படைவாத இயக்கம், மாறா மரபுக் கோட்பாட்டு இயக்கம்
தமிழ் விளக்கம்
மத அடிப்படையிலான, வலுவான நம்பிக்கைகளின் மேல் கட்டமைக்கப்பட்டு, தங்களின் நம்பிக்கைகளே சாசுவதமான உண்மைகள் என்று பரப்புரை செய்வதும், அதை ஏற்காத பிற நம்பிக்கையாளர்களை வெறுத்து ஒதுக்குவதுமான நிலை. அரசியல் ரீதியாகப் பழமைவாத கருத்துக்கொண்ட இவர்கள், தங்களுடைய கவர்ச்சியான குருமார்கள் தலைமையில், தாங்கள் விரும்பும் சமூக மாற்றத்திற்கான கருத்துக்களைத் தங்களுடைய புனித நூல்களிலிருந்தே மேற்கோள்காட்டி நியாயப்படுத்துவர்.
English
The religious-based political and social cause activities of people with strong religious convictions who espouse their faiths to be the basic and only truthful tenets and who work toward convincing others likewise. These movements tend to be politically conservative and often are led by charismatic clergy who cite the holy writings of their faiths to justify and advocate for social change.