furthering responses

கூடுதலான பதில்களைப் பெறுதல்

தமிழ் விளக்கம்

கூடுதலான பதில்களைப் பெறுதல் என்பது தன்னிடம் வரும் வாடிக்கையாளரிடம் உறவை மேம்படுத்துவதன் மூலம், அவரை தெளிவுடனும், புரியும்படியாயும், கோர்வையாயும் உரையாடச் செய்யும் உத்தி. இதற்கு வாடிக்கையாளர் பேசும்போது கவனமுடன் கேட்பது, வாடிக்கையாளர் சொல்லவருவதை (அவரின் சொல்லாக்கத்தை vocabulary) உற்சாகப்படுத்துவது, அப்படியா? அதற்குப் பிறகு? என்று வாடிக்கையாளர் சொல்வதில் ஆர்வம் காட்டுவது போன்ற உபாயங்களைக் கையாள்வதன் மூலம் வாடிக்கையாளரிடமிருந்து சிகிச்சைக்கு உதவியாக அதிகத் தகவல்களைப் பெறலாம்.
பார்க்க: following responses - மறுமொழிகளை / பதில்களைப் பின்தொடரல் - தன்னுடைய வாடிக்கையாளர்களின் குறைகள், ஆதங்கங்கள் கவனமாகக் கேட்கப்பட்டது, புரிந்துகொள்ளப்பட்டது, என்பதை சமூகப்பணியாளர்கள் உணர்த்தும் முறை.

English

The interview strategy of encouraging clients to communicate with more clarity, depth, and focus and to enhance the working relationship. These activities are based on attentive listening and stimulating the client's verbalization. Furthering responses include minimal prompts (“I see”and“And then . . . ?”) and accent responses (repeating a word or phrase from the client's verbalization to encourage further elaboration). See also following responses.