GAF Scale
உலகளாவிய மதிப்பீடு அளவுகோல்
தமிழ் விளக்கம்
வயதிற்கு வந்தவர்களின் சமூக, தொழில்சார், உளவியல் செயல்பாட்டையும், அவர்கள் தங்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எப்படிச் சமாளிக்கின்றார்கள் என்பதை அறிய உதவும் எண்கள் சார்ந்த (0 முதல் 100 வரை) உலகளாவிய மதிப்பீடு அளவுகோல்.
பார்க்க: Defensive Functioning Scale - மனிதர்கள் தங்கள் உளச்சிக்கல்களிலிருந்தும், மன அழுத்தத்திலிருந்தும் விடுபடத் தன்னுணர்வின்றி பல உளப்பாதுகாப்பு முறைகளைக் கையாளுகின்றார்கள். இந்தப் பாதுகாப்புச் செயல்பாடுகள் எந்த முறையில் / எந்த அளவில் வெளிப்படுகிறது என்பதை உளச்சோதனைகள் மூலம் அளந்தறியலாம். இந்தப் பாதுகாப்புச் செயல்பாடுகள் பொதுவாக நான்கு வகைகளில் வெளிப்படுமென்று உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர் 1. ஆரோக்கியமற்ற உளப்பாதுகாப்பு முறைகள் (pathological defences) உளவியல் ரீதியாகப் பிரச்சனையை மறுப்பது (psychotic denial), பிரச்சனைகளுக்குப் பிறரின் சதியே காரணமென்று சந்தேகித்தல் (delusional projection). 2. மன முதிர்ச்சியற்ற உளப்பாதுகாப்பு முறைகள் (immature defences) பிரச்சனையைக் கையாளாமல் பகற்கனவு காண்பது (fantasy), பிறர் மீது பழி சுமத்துவது (projection), அச்சுறுத்தும் வகையில் அமைதி காப்பது (passive aggression), நேரடியாகப் பொருள் புரியாவண்ணம் பேசிக் குழப்புவது அல்லது ஆத்திரத்துடன் செயல்படுவது (acting out). 3. விரக்தியான பாதுகாப்பு முறைகள் (neurotic defences). எதையும் சமத்காரமாக நியாயப்படுத்துவது (intellectualization), எதிர் வினையாற்றல் (reaction formation), பிரச்சனையை எதிர்கொள்ளாமல் கைவிடல் (dissociation), மன அழுத்தத்தை அடுத்தவரிடம் காட்டுதல் (displacement), உணர்ச்சிகளைப் பொய்யாக மறைத்துக் கொள்ளல் (repression), 4. முதிர்ச்சியான உளப்பதுகாப்பு முறைகள் (mature defences) பிரச்சனையை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தல் (humour), உயர்குறிக்கோள்களை மாற்றாக்கிக் கொள்ளல் (sublimation), பிரச்சனையை அடக்கிக்கொள்ளல் (suppression), தன்னலமற்ற சேவைகளில் மனத்தை ஈடுபாடுத்தல் (altruism), பிரச்சனையை எதிர்கொள்ளல் (anticipation) ஒன்றிற்கொன்று தொடர்புடைய இந்தப் பாதுகாப்பு முறைகளை, பாதுகாப்புச் செயல்பாட்டு அளவுகோளைக் கொண்டு அளந்தரியலாம். இந்த அளவுகோளின்படி முதிர்ச்சியான பாதுகாப்பு முறைகளான பிரச்சனையை நகைச்சுவை உணர்வுடன் வெளிப்படுத்தல், உயர்குறிக்கோள்களை மாற்றாக்கிக் கொள்ளல், பிரச்சனையை அடக்கிக்கொள்ளல், தன்னலமற்ற சேவைகளில் மனத்தை ஈடுபாடுத்தல், பிரச்சனையை எதிர்கொள்ளல், தன்னம்பிக்கை, அகநோக்கு போன்ற முறைகள் உயர்நிலையிலும், மகிழ்ச்சியற்ற உணர்வுகளை மறைத்துக் கொண்டு, பிரச்சனையைக் கையாளாமல் பகற்கனவு காண்பது, பிறர் மீது பழி சுமத்துவது, அச்சுறுத்தும் வகையில் அமைதி காப்பது, நேரடியாகப் பொருள் புரியாவண்ணம் பேசிக் குழப்புவது அல்லது ஆத்திரத்துடன் செயல்படுவது, நியாயப்படுத்துவது, பிரச்சனையை எதிர்கொள்ளாமல் கைவிடல், மன அழுத்தத்தை அடுத்தவரிடம் காட்டுதல், உணர்ச்சிகளைப் பொய்யாக மறைத்தல் போன்றவை இடைநிலையிலும், இது தவிர பிற முறைகளனைத்தும் உளப்பாதுகாப்பு சீர்கேடுகளைக் குறிக்கும் அளவீடுகளாகக் கொள்ளப்படுகின்றது

English
See Global Assessment of Function (GAF) Scale.