GAIN programs
அதிக சுதந்திரத்திற்கான அளாவம் / நிழற்சாலை
தமிழ் விளக்கம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் செயல்படுத்தப்பட்ட ஒரு சமூகநலத் திட்டம். இந்தத் திட்டத்தின்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு கல்வி, பயிற்சி, வழி காட்டல் மூலம் வேலைவாய்ப்பிற்கான வழிமுறைகள் காட்டப்பட்டன. இத்திட்டத்தின்படி ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் உள்ள குடும்பத்தில் வருமானமீட்டும் தலைவருக்கு வேலை உத்தரவாதம் இல்லாதபோது, அவர்களுக்குப் பொதுப் பணிகளில் குறைந்த பட்சம் ஓராண்டுக்கு வேலை உத்தரவாதம் கொடுக்கப்பட்டது.
English
Greater Avenues to Independence, a series of state public welfare programs originating in California, in which public assistance recipients are provided with training, education, job counseling, and job placement. If the programs are not successful in getting an eligible Aid to Families with Dependent Children (AFDC) family head into the work force, the recipient is provided with up to one year of employment in relevant public service positions. See also ET programs.