gang

கும்பல், குற்றம் செய்யும் நோக்கத்துடன் இயங்கும் கும்பல் / கூட்டம், குழுவாகப் பணிபுரியும் வேலையாள்கள், வேண்டாத செயலில் ஈடுபடுவதற்காகக் குழுவாய்ச் சேர்தல், கூட்டமாய்ச் சென்று தாக்குபவர்கள், கூட்டியங்குபவர்கள்

தமிழ் விளக்கம்

பரஸ்பரப் பிணைப்பிற்கு வழிவகுக்கும் வயது, இனம், ஒரே குடியிருப்பில் வசித்தல், பொதுவான ஆர்வம் அல்லது மதிப்பீடுகளின் அடிப்படையில் தன்னிச்சையாக ஒன்று கூடுபவர்களைத்தான் சமூகவியல் கும்பல் என்றழைக்கின்றது. ஆனால் சமூகப்பணியாளர்கள், சட்டம் ஒழுங்கு முறை அமல்படுத்துபவர்கள், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் ஒத்திசைவான இளம் பருவக் குழுவினரை கும்பல் என்றழைக்கின்றனர்.

English

In sociological terms, a group that originally forms spontaneously and whose members maintain a relationship because they share certain attributes. These attributes include age, ethnicity, residence in a neighborhood, or common values that lead to mutual bonding. Social workers and legal authorities often use the term to refer to a fairly cohesive group of adolescents who support one another in various antisocial pursuits.