Ganser's syndrome
கென்சர் நோய்க்கூறு
தமிழ் விளக்கம்
கென்சர் (1853–1931) என்ற மனநோய் மருத்துவரால் முதன்முதலில் அடையாளம் காணப்பட்ட நோய்க்கூறு. கேட்கப்படும் கேள்விகளுக்கு அற்பத்தனமான; மடத்தனமான, அறிவற்ற, பொருத்தமற்ற பதில்களைக் கூறும் பாங்கு. எதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கின்ற, எதையும் ஏற்க மறுக்கிற, ஐயப்படுகிற இளஞர்களிடத்திலும், சிறைக்கைதிகளிடத்திலும் இந்த நடத்தைப் பாங்கு அதிகமாகத் தென்படுவதைக் காணலாம். இந்தக் கோளாறு கடுமையான மன அழுத்தம், பதட்டம் மற்றும் மனச் சிதைவினால் கூட சில நேரங்களில் இக்கோளாறு ஏற்படாலாம்.
பார்க்க: factitious disorder - செய்ற்கையாக நோய்க்குறிகள் வெளிப்படுத்தும் சீர்கேடு, போலி நோய்க்குறிகள், மனநோய் இருப்பது போல பாசாங்கு செய்தல் - நோய் வந்தமாதிரி பாசாங்கு செய்வது, மயக்கமடைவது, நோய்க்குறிகளை மிகைப்படுத்திச் சொல்வது போன்ற கோளாறுகள். இந்தக் கோளாறுள்ளவர்கள் தங்கள் சிறுநீர் மாதிரிகளை நச்சுப்பொருள்களால் மாசுபடுத்துவது, மயக்கமருந்தை உட்கொண்டு மயக்கம் கொள்வது, தொற்று ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை ஊசிமூலம் உட்செலுத்திக்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு நோய் உள்ளது என்பதைச் செயற்கையாக நிரூபிக்க முயல்வர். அதிகக் கவனம் பெறவேண்டியோ, சலுகைகளை, பச்சாதாபத்தை எதிர்பார்த்தோ, தன் மீதுள்ள கடுமையைக் குறைக்க வேண்டியோ தனக்கு நோய்க்குறிகள் இருப்பது மாதிரியோ அல்லது தன் பாராமரிப்பிலுள்ளவர்களுக்கு நோய்க்குறி இருப்பது மாதிரியோ பாசாங்கு செய்யலாம். சிலர் சலுகைகளை மட்டும் எதிர்பார்த்து, சிலர் சமூக நலத்திட்டங்களைப் பெறவும், இன்னும் சிலர் கட்டாய இராணுவ சேவையிலிருந்து விடுபட நோயுற்ற மாதிரி பாசாங்கு செய்வதை malingering என்று சொல்வர்.

English
A pattern of behavior in which the client gives silly or absurd and irrelevant answers to questions. The behavior is sometimes seen in defiant or shy youngsters and prison inmates. Sometimes it is a symptom of severe anxiety, depression, or schizophrenia.