garnishment
பற்றுகைப் பிடித்தம், ஜப்தி
தமிழ் விளக்கம்
கடன்பட்ட ஒருவரின் சொத்து, பிற நபர்களின் பராமரிப்பிலோ, நிர்வாகத்திலோ இருந்தாலும், அந்த சொத்திலிருந்து கடன் கொடுத்தவருக்கு திருப்பிச் செலுத்த உத்தரவிடப்படும் நீதிமன்ற உத்தரவு. தங்களுடைய பொறுப்புக்களைத் தட்டிக்கழிக்கின்றார் என்று நீதி மன்றம் ஒருவரைச் சந்தேகிக்கும் போது, அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற அவர் சம்பளத்திலிருந்து தொகையைப் பிடித்தம் செய்து உரியவருக்கு வழங்க (ஜீவனாம்ஸம், குழந்தை மற்றும் பெற்றோர் பராமரிப்பு) அவர் வேலை பார்க்கும் நிறுவனத்திற்கே நீதிமன்றம் உத்தரவிடலாம்.
English
A legal process by which a creditor may have a judgment against a debtor's money or other property (such as wages, salary, or savings) in the possession or control of a third party. Under state law, the court may order the employer, banker, or other holder of the property to remit such funds to an agent of the court or to the creditor until the obligation has been fulfilled. For example, an employer may be required to withhold a portion of an employee's salary and remit it to the court to meet the employee's child support obligation.