Gault decision

கால்ட் வழக்கு தீர்ப்பு. இளங்குற்றவாளிகள் விசாரணை பற்றிய நடைமுறை

தமிழ் விளக்கம்

ஓரா குக் என்ற பெண்மணி, தன்னை தன்னுடைய அடுத்த வீட்டிலிருந்த, ஜெரால்ட் கால்ட் என்ற 15 வயதுச் சிறுவன், தொலைபேசியில் கொச்சையாகப் பேசியதாகக் குற்றம் சாட்ட, அதனைடிப்படியில் கால்ட் (Gerald Gault) சிறுவர் காப்பகத்தில் அடைக்கப்படுகின்றான். அதையொட்டி நடந்த நீதிமன்ற வழக்கில் வெளியான புகழ்பெற்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பே Gault decision (1967) எனப்படுகிறது. இந்தத் தீர்ப்பின்படி குற்றமிழைத்த சிறுவர்களைக் கைது செய்யும் போது, வயது வந்த குற்றவாளிகள் நடத்தப்படும் மாதிரி, முறையான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வது, வழக்கறிஞரை வைத்து வழக்காட உரிமை வழங்குவது, சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்ய உரிமை, ஆலோசனை பெற உரிமை என்று பல உரிமைகள் வழங்கப்பட்டன. கால்ட் தீர்ப்பிற்கு முன்னர் இளைஞர்களின் குற்ற நடத்தைகள் உரிமையியல் (civil) வழக்குகளாக நடத்தப்பட்டு வந்தன. இதன் பின்னர்தான் முறையான நீதிமன்றப் பரிசீலனைக்கு வந்தது. இந்த நடைமுறை இளங் குற்றவாளிகளைக் கையாள்வதில் சமூகப்பணியாளரின் பங்கைக் கணிசமாகக் குறைத்ததால், இளங் குற்றவாளிகளைக் கையாள்வதில் சமூகப்பணியாளர்கள் மாற்று முறைகளைக் கையாளக் கற்றுக்கொண்டனர்.

English

The 1967 judgment rendered by the U.S. Supreme Court (In re Gault) that affirmed the right of juveniles to the same legal protections as adults in criminal court proceedings. This decision gave juveniles the right to proper advance notification of the charges, the right to counsel, freedom from self-incrimination, and the opportunity to have their counsel confront witnesses. Before the Gault decision, juvenile proceedings were regarded as civil, not criminal, and the state was supposedly acting in the interest of the child. The decision strengthened the role of law enforcement personnel and formalized court procedures. It decreased the influence of social workers and required new modes of operation by social work personnel.