General Accounting Office (GAO), U.S.
பொது கணக்குவைப்பு அலுவலகம், அமெரிக்கப் பொது நிதி கணக்காயர் அலுவலகம்
தமிழ் விளக்கம்
பொதுக் கணக்கு வைப்பு அலுவலகம் என்பது அரசுக் கணக்குகளை தணிக்கை செய்ய பெரும்பாலான நாடுகளில் செயல்படும் தணிக்கை முறையாகும். இந்தியாவில் இந்த அலுவலகம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் (Comptroller and Auditor General (CAG) of India) எனப்படுகிறது. இந்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் அரசு நிதி உதவியைக் கணிசமான அளவில் பெறும் அமைப்புகளின் வரவு செலவுக் கணக்கைச் சரிபார்க்கும் அதிகாரத்திற்காக இந்திய அரசியலமைப்பின் (Chapter V) கீழ் நிறுவப்பட்ட ஓர் அதிகார மையம் ஆகும். இதன் தலைவர் குடியரசுத் தலைவருக்கு நேரடியாகக் கட்டுப்பட்டவர். அவர் அரசுக்கு எந்தவிதத்திலும் கட்டுப்பட்டவர் கிடையாது.
அரசுடமையாக்கப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் வெளித் தணிக்கையாளராகவும் இவர் செயல்படுகிறார். தலைமைக் கணக்குத் தணிக்கையாளரின் அறிக்கைகள் நாடாளுமன்ற / மாநிலச் சட்டப்பேரவைகளின் சிறப்புக் குழுக்களான பொது கணக்குக் குழுக்களால் ஆய்வு செய்யப்படுகின்றன. இந்தியத் தணிக்கை மற்றும் கணக்குத் துறை நாடெங்கும் 58,000 ஊழியர்களைக் கொண்டு செயல்படுகிறது. இந்தியத் தலைமைக்கணக்கு அதிகாரி இந்திய அதிகார முன்னுரிமைப் பட்டியலில் ஒன்பதாவதாக, உச்ச நீதிமன்ற நீதிபதிக்கு இணையாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளார். தற்போது இதன் தலைமை அதிகாரியாய் செயல்படுபவர் வினோத் ராய். இவரின் தலைமையின் கீழ் இயங்கிய பொழுது இந்த அமைப்பு அரசின் முறைகேடுகளை வெளிப்படுத்தியமையால் குறிப்பாக இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை முறைகேடு (2G Scam), பொதுநலவாய விளையாட்டுகள் (Common Wealth Games Scam) நடத்துதலில் ஊழல் மற்றும் இந்திய நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு (Coalmine Allocation) முறைகேடு பரவலாக ஊடகங்களில் அறியப்படுகிறது. அரசுடன் வருமானத்தைப் பகிர்ந்து கொள்ளும் திட்டங்களில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் - பொது பங்களிப்புத் திட்டத்தை (Public Private partnership - PPP) ஆய்வு செய்யும் அதிகாரம் தலைமைக் கணக்குத் தணிக்கையாளருக்கு உண்டு.

English
The independent federal agency within the legislative branch of government that assists the Congress in determining whether public funds are efficiently and economically administered and spent and in evaluating the results of existing government programs and activities. As such, GAO has general rights of access to and examination of any records of the federal departments and agencies for which Congress has allocated funds.