generalization

பொது விதி காணல், பொது மெய்ம்மை காணல், பொதுக்கருத்து காணல், பொதுமைப்பாடு காணல், விதிவரு முறையினால் பெறப்பட்ட பொதுக்கருத்து உருவாக்குதல், பொதுக்காரணியாக்கல், மேலோட்டப்பார்வை, ஸாமான்யதர்மம்

தமிழ் விளக்கம்

பொதுப் பயன்பாடு கொண்ட ஒரு கொள்கை, அறிக்கை, அல்லது யோசனை. ஒரு குழுவைப் பற்றியோ, கருத்தைப் பற்றியோ, நிகழ்வைப் பற்றியோ அறிந்ததை வைத்தும் அனுபவத்தை வைத்தும் ஒரு முடிவுக்கு வருதல். மனநோய் சிகிச்சையில் யாரும் செய்யாத செயலையா செய்துவிட்டேன் என்று தன்னுடைய இயலாமையை எல்லோருக்குமான பொதுப் பிரச்சனையாக்கி குற்ற உணர்விலிருந்து தப்பிக்க உபயோகிக்கும் உளப்பாதுகாப்பு உத்தி. சமூகப்பணியாளர்கள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் சில நேரங்களில் உங்களை மாதிரிதான் எல்லோரும் நினைப்பார்கள் என்று ஆறுதல்படுத்த முயலும் உத்தி.

English

1. The process of forming an idea, judgment, or abstraction about a class of people, things, or events based on limited or particular experiences. 2. In psychotherapy, an act or pattern of behavior in which an individual avoids discussing personal problems by characterizing them as being universal. For example, a client may say, “Every couple fights,” to conceal current marital conflicts. 3. Generalizations are also used in social work practice to connect or clarify a client's experiences with others. For example, the social worker might say, “Everyone feels depressed at times.”