genital personality

பிறப்புறுப்பு ஆளுமை

தமிழ் விளக்கம்

சிக்மண்ட் பிராய்ட் மனித ஆளுமை வளர்ச்சி உள-பாலியல் (psycho sexual) சார்ந்து ஐந்து நிலைகளில் ஏற்படுவதாகக் கூறினார். 1.சப்புப் பருவம் (வாய்வழி) சுவைத்தல் நிலை - Oral Stage - பிறப்பு 18 மாதங்கள்).2. குதப் பருவம் (கழிவின்பம் காணும் நிலை - Anal Stage -மூன்று ஆண்டுகள் 18 மாதங்கள்). 3. குறியின்பப் பருவ நிலை (பால் உணர்வு நிலை -Phallic Stage - வயது மூன்று முதல் ஆறு).4. செயலற்ற நிலை (உள்ளடங்கிய பால் உணர்வு நிலை - Latency Stage 6 முதல் பருவமடைதல் வரை). 5. பிறப்புறுப்பு நிலை (genital stage - பருவமடைந்தது முதல் இறுதி வரை). பிறப்புறுப்பு ஆளுமை நிலை என்பது உளம் சார் பாலியல் வளர்ச்சியின் இறுதி நிலையாகும். ஆண் பெண் பருவமடைதலில் ஆரம்பிக்கும் இந்த நிலை மனிதரின் வாழ்நாள் முழுக்க நீண்டிருக்கும். இது பாலியல் ரீதியாக முதிர்ச்சி பெற்ற நிலை. இந்தப் பருவத்தில் இதற்கு முந்தைய பருவங்களான சிறார் பருவத்து, தன்னை மையப்படுத்திய பாலியல் இயல்புகள் மாறி, அடுத்தவர் மீது, குறிப்பாக எதிர்பாலினத்தவர் மீது அக்கறையும் கரிசனமும் கொள்ளச் செய்யும் பருவம். இனப்பெருக்க ஆர்வம் மட்டுமல்ல, அறிவு மற்றும் படைப்பாற்றலில் பெருக்கவும், விரிக்கவும் ஆர்வமேற்படும். தங்களது வாழ்நாளில் எதையாவது ஆக்கபூர்வமாக விட்டுச் செல்ல வேண்டுமென்ற ஆர்வம் விழையும்.

English

A descriptive term originating in psychoanalytic theory referring to one who is excessively preoccupied and concerned about sexuality; the term is also known as the oedipal personality or genital character. The individual is seen as having personality problems involving self-image, sexual identity, and sexual orientation, and sometimes a paraphilia. See also anal personality and oral personality.