genogram
மரபியல் வரைபடம், தலைமுறை வரைபடம்
தமிழ் விளக்கம்
குடும்பச் சிகிச்சையில், குறைந்த பட்சம் மூன்று தலைமுறை குடும்ப உறவுகளை அறிந்துகொள்ள வட்டம், சதுரம், கோடுகள் மற்றும் புள்ளிகளைக் குறியீடாகக் கொண்டு வரையப்படும் வரைபடம். ஆண்களுக்கு சதுரமும், பெண்களுக்கு வட்டமும், திருமண உறவுகளைக் கிடைகோடுகளாகவும், சந்ததியினரைச் செங்குத்து கோடுகளாகவும் குறிக்கின்றனர். இது ஒரு குடும்பத்தின் கட்டமைப்பைப் பற்றி சுய விளக்கமளிக்கும் வரைபடம். ஒவ்வொரு உறுப்பினரும் தங்களுக்குள் கொண்டிருக்கும் உறவு முறையை, வட்டங்கள், சதுரங்கள் மற்றும் கோடுகள் போன்ற குறியீடுகளின் மூலமாக விளக்குவது. இது genogram என்றும் சொல்லப்படும் ஒரு குடும்பத்தின் மரபு வழி கட்டமைப்பை / தலைமுறைத் தன்மையை விளக்கும் வரைபடம். ஒரு குடும்பத்தின் பல தலைமுறையைச் சேர்ந்தவர்களின் ஆளுமைப் பண்புகள், நடத்தைப்போக்குகள் (திருமணம், விவாகரத்து), தற்போதைய தலைமுறையின் மீது செலுத்தும் தாக்கம் போன்றவற்றை இந்த வரைபடத்தின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.
English
A diagram used in family therapy to depict family relationships extended over at least three generations. The diagram uses circles to represent females and squares for males, with horizontal lines indicating marriages. Vertical lines are drawn from the marriage lines to other circles and squares to depict the children. The diagram may contain other symbols or written explanations to indicate critical events, such as death, divorce, and remarriage, and to reveal recurrent patterns of behavior.