goodness of fit
பொருந்தும் தன்மை / ஒன்றும் தன்மை
தமிழ் விளக்கம்
மக்களுடைய தேவைகள், திறன்கள், குறிக்கோள்கள், சமூகம் மற்றும் புறச் சூழல்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஒன்றிப்போதல்.
பார்க்க: adaptation - தகவமைவு, ஒத்துப் போகும் குணம - தகவமைப்பு என்பது மனிதர்களும், பிற உயிரினங்களும் தாங்கள் வாழவும், தங்களை வளர்த்துக்கொள்ளவும், இனப்பெருக்கம் செய்யவும் தாங்கள் வாழும் சுற்றுப்புறத்தோடு இணைந்து செல்லும் தன்மை. இது பரஸ்பரமாக, உயிரனங்கள் சுற்றுப்புறத்தின் மீதும், சுற்றுச் சூழல் உயிரனங்கள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம். அமைப்பு முறைக் கோட்பாட்டை தங்கள் அணுகுமுறையாகக் கொண்டு பணியாற்றும் சமூகப்பணியாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களை நெருக்கடியிலிருந்து விடுவிக்க வேண்டுமென்றால், அந்த நெருக்கடிகளைச் சமாளிக்கும் உளத்திறனை வளர்த்தோ, அல்லது நெருக்கடியோடு தகவமைத்துக் கொள்ளவோ உதவி செய்கிறார்கள்.
life model - சமூகப்பணியில், ஒரு வாடிக்கையாளருக்கும் (அவரது பிரச்சனை) அவரது சுற்றுப்புறத்திற்கும் உள்ள தொடர்பை விளக்க (உயிர்ச்) சூழலியலில் சொல்லப்படும் கண்ணோட்டங்களை, சூழலுக்கும் மனிதருக்கும் ஏற்படும் பரஸ்பர தாக்கங்களை உருவகமாக்கி (metaphor) விளக்குவதுண்டு. சூழலியல் கண்ணோட்டத்தை பின்பற்றும் சமூகப்பணியாளர்கள், ஒரு மனிதனுக்கும் அவனது சுற்றுப்புறத்திற்கும் இடையில் நிகழும் தொடர்பாலும், பரிமாற்றங்களாலுமே, மனிதனுக்கு மன அழுத்தம் உருவாகி அவனது வாழ்க்கைப் போக்கிலும், மனிதர்களுக்கிடையேயான உறவு முறைகளிலும் தாக்கமேற்படுத்தி, வளர்ச்சிக்கான தடைகளை உருவாக்குவதாக கருதுகின்றார்கள். இந்த உயிராற்றல் மாதிரி / வாழ்க்கை முன்னுதாரண அணுகுமுறையை பின்பற்றும் கார்ல் பெய்லி மற்றும் அலெக்ஸ் கிட்டேர்மன் (Carel Bailey Germain and Alex Gitterman) போன்ற சமூகப்பணியாளர்கள், மனிதர்களிடமும், குழுக்களிடமும் வளர்ச்சிக்கு உதவும் திறன்களை வெளிக்கொண்டுவந்து, வளர்ச்சியை ஊக்குவிக்கும் தொடர்புகளை மீட்டெடுக்க சுற்றுச் சூழல் தரும் அழுத்தங்களைப் புரிந்து கொண்டு அதைக்குறைக்க வேண்டுமென்று கருதுகின்றனர் இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் மானுட வாழ்வென்பது தனித்த நிகழ்வாக இருக்க முடியாது. ஒவ்வொரு தனிமனிதனின் வாழ்க்கையும் பிறர் வாழ்க்கையுடன் பிணைந்துள்ளது. மானுட வாழ்க்கை ஒட்டுமொத்தமாக மழையுடனும் வெயிலுடனும் காற்றுடனும் கலந்துள்ளது. இங்குள்ள உயிர்குலத்தின் வாழ்வுடன் அது இணைந்துள்ளது. இருப்பது வாழ்க்கை என்னும் ஒற்றைப்பெருநிகழ்வு.”

English
The degree of congruence between people's needs, capacities, and goals and the properties of their social and physical environments. See also adaptation, ecological perspective, and life model.