Gramm–Rudman–Hollings Act
சமப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட மற்றும் அவசரகால பற்றாக்குறை கட்டுப்பாடு சட்டம் 1985
தமிழ் விளக்கம்
எதிர்பார்த்த பலனை ஒரு திட்டம் அளிக்கவில்லை என்று அமெரிக்காவின் தலைமைக் கணக்காளர் தனது தணிக்கையின் போது காண நேர்ந்தால், அத்திட்டத்திற்காக செலவிடப்படும் நிதியைக் குறைக்கவோ, அதை மறுக்கவோ அதிகாரமாளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், பில் கிராம், வாரன் ரத்மன் மற்றும் ஏர்னஸ்ட் ஹோலிங்க் என்ற மூன்று அமெரிக்க செனட்டர்கள் கொண்டுவந்த சட்டத்திருத்தம். தலைமைக் கணக்காளருக்கான இந்த அதிகாரம் அரசியல் சட்டத்திற்கு முரணானது என்று கருத்து தெரிவிக்கப்பட்டதால், நிதி முடக்கம் என்ற பொருளை மாற்றிச் செலவினங்களைக் கட்டுப்படுத்தும் சட்டமாக திருத்தம் செய்யப்பட்டது.
English
The budget reduction legislation (Balanced Budget and Emergency Deficit Control Act of 1985, P.L. 101-508) requiring progressively lower deficits in the federal budget in each fiscal year from 1986 through 1991. The act's deficit-lowering goals were not reached.