grantsmanship
நிதி உதவியைப் பெரும் சாமர்த்தியம்
தமிழ் விளக்கம்
சமூக நல நிர்வாகத்தில் நிதி திரட்டல் என்பது மிக முக்கியமான பணி. இதற்கு மக்களின் தேவைகளுக்கு ஏற்ப புதுமையான, நடைமுறை சாத்தியமான திட்டங்களை வடிவமைக்கத் தெரிந்திருக்கவேண்டும். அதைப் பிறர் மனமேற்கும்படி செய்வதற்கான பேச்சு மற்றும் எழுத்துத் திறன் வேண்டும். அந்தத் திட்டத்திற்கு யாரிடம் பண உதவி பெறலாம் என்பதையும், அந்தத் திட்டத்தை நிர்வகிக்க, பல்வேறு தரப்பினரை ஒருங்கிணைக்க, அரசியலணைவு நாடத் தெரிந்திருக்க வேண்டும்.
English
In social administration, the ability to develop proposals for special project funding. The ability includes skills in research design, verbal communication, sales, writing, needs assessment, innovation of new techniques for problem solving, coordination of plans, and political and administrative activity, as well as knowledge about the appropriate sources of project funds.