grass-roots organizing
ஆரம்ப நிலை அமைப்பாக்கல், மக்களை அமைப்பாக்கல்
தமிழ் விளக்கம்
ஓரிடத்தில் அல்லது ஒரு வட்டாரத்தில் வாழும் மக்களிடம் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களுக்கென்று பொதுவான குறிக்கோள்களை உருவாக்கி, அக் குறிக்கோள்களை அடைய அமைப்பையும் உருவாக்கும் முயற்சியே சமூகப்பணியின் சமுதாய அமைப்பு முறையின் செயல்முறையாகும். மாற்றங்களால் ஏற்பட்ட சாதக, பாதகங்களைத் தலைவர்கள் மூலமாக அல்லாமல் மக்களிடம் நேரிடையாக எடுத்துரைத்து, அதில் எதற்கு ஆதரவு தருவது, எதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்று அவர்களுக்குப் புரியவைத்து மக்களின் முயற்சியை ஒருங்கிணைப்பது.
English
The community organization strategy of helping at the local level the members of a neighborhood or geographic region to develop stronger relationships, common goals, and an organization that will help them achieve those goals. The focus is on organizing the people who will be affected by change, rather than on organizing only the community leaders. This involves educating and mobilizing people for action toward agreed-on goals. See also political activism.