Gray Panthers
சாம்பல் / நரைத்த சிறுத்தைகள்
தமிழ் விளக்கம்
முதியோர்களின் சமூகப் பொருளாதார உரிமைகளுக்காகவும், வேலை வாய்ப்புகளிலும் பிற தளங்களிலும் முதியவர்கள் மீது காட்டப்படும் பாரபட்சத்தைப் போக்கவும் மேகி குன் என்ற அம்மையாரால் 1970 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். அந்த அம்மையார் இறந்த 1995 ஆம் ஆண்டில், 85 கிளைகளைக் கொண்டு, 70,000 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. முதியோர்களுக்கு எதிரான நடைமுறைகளை நீக்கவும், அவர்களுக்கு சாதகமான சட்டங்களை இயற்றவும், அதை நடைமுறைப்படுத்தவும் இந்த அமைப்பு பாடுபட்டு வருகின்றது.
English
An intergenerational advocacy group founded by Maggie Kuhn in 1970 to work on behalf of the social and economic needs of elderly people. The group's major focus is on state and national legislation affecting older people and on issues affecting all ages. It also acts as watchdog in implementing legislation.