Great Society

மேன்மைமிக்க சமூகம்

தமிழ் விளக்கம்

ஜனாதிபதி லிண்டன் பி ஜான்சன் அவர்களால் முதலில் மிச்சிகன் பல்கலைக்கழகத்திலும், பின்னர் ஓஹியோ பல்கலைக்கழகத்திலும் அமெரிக்க சமூகம் எப்படி இருக்கவேண்டுமென்பதை விளக்கப் பயன்படுத்தப்பட்ட வார்த்தை. இதனடிப்படையில் 1964 ஆம் ஆண்டு 'வறுமைக்கு எதிரான யுத்தம்' என்ற கருத்தின் அடிப்படையில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டன பொருளாதார வாய்ப்புக்கான சட்டம், மருத்துவக் காப்பீடு, வேலைவாய்ப்பு, வீட்டுவசதி, ஆற்றலோடு தொடங்குதல் (Head Start) என்று பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சமூகப்பணியாளர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

English

The name given by President Lyndon B. Johnson to social welfare goals and programs established as a War on Poverty during his administration. Some of these efforts included the Model Cities program, Head Start, the Office of Economic Opportunity (OEO), Medicaid, and Medicare.