greenhouse effect

பசுமை இல்ல விளவு

தமிழ் விளக்கம்

சூரியனில் இருந்து பூமிக்கு சூரிய ஒளி கிடைக்கிறது. இதன் மூலம் பூமி தனக்குத் தேவையான வெப்பத்தைப் பெற்றுக்கொள்கிறது. பூமி தான் பெற்றுக்கொண்ட வெப்பத்தின் ஒரு பகுதியை மீண்டும் செந்நிறக் கதிர்களாக விண்வெளியை நோக்கி வீசுகிறது. வாயுமண்டலத்தில் இருக்கும் சில குறிப்பிட்ட வாயுக்கள் பூமியைச் சுற்றி ஒரு விதமான போர்வை போர்த்தியது போன்று பரவியுள்ளன. அவையாவன, கார்பன்-டை- ஆக்ஸைடு, மீத்தேன் மற்றும் நைட்ரஸ் ஆக்ஸைடு. இவைதான் ‘பசுமை இல்ல வாயுக்கள்’ (கிரீன்- ஹவுஸ் வாயுக்கள்) என்று அழைக்கப்படுகின்றன. அவை இந்த வெப்பத்தை வெளியே விட்டுவிடாமல் தன்னகத்தே அடக்கி வைத்து விடுகின்றன. இப்படித் தேக்கி வைக்கப்பட்ட கதிர்கள்தான் பூமியைச் சூடாக வைத்திருக்கின்றன. இதுதான் 'பச்சை வீட்டு விளைவு' அல்லது 'பசுமை இல்ல விளைவு' என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்ற நிகழ்வு பூமியில் நடைபெறாமல் போனால், பூமி குளிர்ந்து நீர் முழுவதும் உறைந்துவிடும்.
ஆனால், அதிகரித்து வரும் சுற்றுச்சூழல் சீர்கேடு வளிமண்டலத்தில் மேலும் கார்பன்-டை-ஆக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்களை அதிகரிக்கச் செய்கிறது. இதனால், இந்த வாயுக்கள் பூமியைச் சுற்றிலும் கண்ணாடுக் கூண்டு போல இருந்து வெப்பத்தை (செந்நிறக் கதிர்களை) வளிமண்டலத்தில் இருந்து தப்பி விட முடியாதபடி, தன்னகத்தே உறிஞ்சி வைத்துக் கொள்கின்றன.
இதனால் பூமியின் வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. ஒருபக்கம் கடும் வறட்சியும், மற்றெரு புறம் பெரும் வெள்ளம், கடும் புயல், சூறாவளி என்று இயற்கை சீற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

English

The heating of the environment as a result of the burning of fossil fuels (such as coal and oil). Burning these fuels results in an atmospheric gain in carbon dioxide molecules. The excess carbon dioxide in the atmosphere does not prevent the sun's rays from reaching the earth's surface but prevents the escape of heat radiating from the ground. Some scientists believe that unless there is a drastic reduction in the use of fossil fuels the earth's weather and heat level is likely to increase by five degrees in the next 30 to 100 years, an increase that could significantly change the earth's climatic patterns.