greenlining

பச்சைக்கோடு நடைமுறை / சம வாய்ப்புக் கடன் நடைமுறை

தமிழ் விளக்கம்

Redlining நடைமுறை என்பது வசதியற்றவர்களை, குடிசைப் பகுதிகளை வரைபடத்தில் சிவப்பு மையால் அடையாளமிட்டு அப்பகுதிகளுக்கோ அப்பகுதி மக்களுக்கோ கடன் வழங்க எச்சரிக்கை செய்த வங்கிகளின் நடைமுறை. சுருக்கமாக, வசதியான, கடனை திருப்பிச் செலுத்த முடிந்தவர்களுக்கு வங்கிகள் கடனளிக்கும் முறை. மாறாக, சமகடன் வாய்ப்புச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு, வங்கிகள் ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும் கடன் கொடுக்க அரசால் வற்புறுத்தப்பட்டனர். அதற்கு இணங்காத வங்கிகளில் போடப்பட்டிருக்கும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெரும் போராட்டத்தை சமுதாயப் பணியாளர்கள் முன்னெடுத்து வங்கிகளின் நடைமுறையை ஏழைகளுக்கு அனுசரணையாக மாற்ற முயற்சி எடுத்தனர். இதுவே பச்சைக்கோடு நடைமுறை.

English

A tactic used by community organizers in which residents of a neighborhood are mobilized to withdraw their funds from banks that are not equal opportunity lenders or that practice redlining. See also Equal Credit Opportunity Act (ECOA).