grief work
வருத்தத்தின் செயல்பாடு
தமிழ் விளக்கம்
வருத்தமுற்றவர் அந்த வருத்தத்தை பல நிலைகளிலே கடக்க முடியும். எலிசபெத் கூபர் ராஸ் என்ற மனநல நிபுணர் மனிதர்கள் தங்கள் வருத்தத்திலிருந்து மீண்டெழும் நிலைகளைக் குறித்துள்ளார். அவையாவன 1. இழப்பை மறுத்தல் (Denial), 2. இழப்பு ஏற்படுத்திய இயலாமையால் ஏற்படும் ஆத்திரம் (Anger), 3. இழப்பை உணர ஆரம்பித்து தன்னிடமுள்ள பிறவற்றால் அவ்விழப்பை ஈடுகட்ட முனைதல் (Bargaining), 4. எதிர்பார்த்த வேகத்தில் இழப்பை ஈடுகட்ட முடியாதபோது ஏற்படும் விரக்தி (Depression), 5. இழப்பை ஏற்றுக்கொண்டு வாழப் பழகிக்கொள்ளல் (Acceptance)
English
A series of emotional stages or phases following an important loss, which gradually permit adjustment and recovery. The individual typically reminisces, expresses emotions, accepts, adjusts to the new situation, and forms new relationships.