group

ஓர் உருவாய் அமையும் தொகுதி, குழு, இனம்

தமிழ் விளக்கம்

பரஸ்பர ஆர்வமும், அக்கறையும் கொண்ட, கூட்டாக இணைந்து செயல்பட முடிந்த, ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களின் தொகுப்பு. குழுக்கள் பலவகைப்படும் அதில் முக்கியமானவை முதன்மை (Primary) மற்றும் இரண்டாம் (Secondary) நிலைக்குழுக்கள்.
பார்க்க: Primary Group - முதல் நிலைக் குழுக்கள், முதன்மைக் குழுக்கள் - முதல் நிலைக் குழுக்கள் என்ற சொற்பிரயோகம் அமெரிக்கச் சமூகவியலார் சார்லஸ் கூலே (Charles Coole) என்பவரால் அவருடைய சமூக அமைப்பு என்ற புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டது. ஒருவருக்கொருவர் நேரடித் தொடர்பிலுள்ள, அன்யோன்யமான, ஒருவருக்கொருவர் பரஸ்பர அக்கறை எடுத்துக்கொள்கிற, ஒத்த கருத்துக்களையும் கலாச்சார மதிப்பீடுகளையும் கொண்டிருக்கின்ற, உளவியல் ரீதியாக ஆறுதல் தரக்கூடிய, சுய அடையாளம் வெளிப்படுமாறு ஒருவர் மீது ஒருவர் செல்வாக்குச் செலுத்தக்கூடிய, இரண்டிற்கு மேற்பட்ட நபர்களை முதல்நிலைக் குழுக்கள் என்ற சொல்லால் குறிப்பர்.

English

A collection of people, brought together by mutual interests, who are capable of consistent and uniform action. Major types of groups include the primary group and the secondary group.