group balance

சமன் செய்யப்பட்ட குழுக்கள், சமநிலைக்குழுக்கள்

தமிழ் விளக்கம்

குழு சமூகப்பணியில் குழுவின் மூலமாகவே உறுப்பினர்களின் நோக்கங்களும், அவர்களுக்கான சிகிச்சையும் அளிக்கப்படுவதால், உறுப்பினர்களின் சேர்க்கை வீதத்தை (உறுப்பினர்களின் தன்மைகள்) மிக நுட்பமாகத் திட்டமிட வேண்டியுள்ளது. ஒரு குழுவின் உறுப்பினர்களில் பெரும்பாலோர் உள்முகத் தேடல் கொண்டவர்களாக, சமூகத்திலிருந்து விலகிருப்பவராக இருக்கும் பட்சத்தில் அங்கே மௌனமும் அமைதியும் மேலோங்கி விடும். இத்தகைய சூழலில், புறத்தேடல்கொண்ட, சகஜமாகப் பழகும் தன்மைகொண்ட நபர்களை அக்குழுவில் சேர்த்துக் கொள்ளும்போது குழுவின் தன்மை சமன் செய்யப்பட்டுவிடும்.

English

A term used in social group work or by group therapists for achieving the optimal mix of group members to achieve the group's goals. For example, if the group consists of so many socially withdrawn people that its norm is silence, more outgoing members are added to give it better balance.