group climate
குழு மனநிலை, குழுச் சூழல், குழுவின் பண்பமைதி
தமிழ் விளக்கம்
ஒரு குழுவின் சமூக உளவியல் சூழலையே குழுமனோபாவம் என்கிறோம். இம்மானோபாவம் கோபமாகவோ, குதூகலமாகவோ, களிமயக்கமற்ற கறார்த் தன்மையானதாகவோ, சந்தேகம் கொண்டதாகவோ, சலனபுத்தியுடையதாகவோ, கரிசனமுடையதாகவோ, கவலைகொண்டதாகவோ இருக்கலாம். குழு சமூகப்பணியாளர்கள் இந்த மனோபாவத்தில் மாற்றத்தை உண்டுபண்ணவோ அல்லது இந்த மனோபாவத்திலிருந்து குழு உறுப்பினர்கள் பயனடையும் மாதிரியோ முயற்சி செய்வார்கள். குழுவின் ஒருசில உறுப்பினர்களின் ஆரோக்கியமான மனப்பான்மை, கருத்துக்கள், உணர்வுகள், உறுப்பினர்கள் எல்லோருக்கும் பொதுவானதாகும் போது, குழு எந்த நோக்கத்திற்காக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை அடைகிறது.
பார்க்க: reciprocal interactions - ஏற்றெதிர் தொடர்பாடல்கள், இணையெதிர் தொடர்பாடல்கள், பரஸ்பரத் தொடர்பாடல்கள் - ஒருவர் வெளிப்படுத்தும் இணக்கமான தொடர்பாடல் சாமிக்கஞைகள் அடுத்தவரைத் தூண்டி அவரை மறுவினையற்ற வைக்கும் முறை.
பார்க்க: reciprocal interactions - ஏற்றெதிர் தொடர்பாடல்கள், இணையெதிர் தொடர்பாடல்கள், பரஸ்பரத் தொடர்பாடல்கள் - ஒருவர் வெளிப்படுத்தும் இணக்கமான தொடர்பாடல் சாமிக்கஞைகள் அடுத்தவரைத் தூண்டி அவரை மறுவினையற்ற வைக்கும் முறை.
English
The social–emotional atmosphere of a group, also called the “group mood.” Group leaders often describe the group in terms of its climate: angry, depressed, celebrative, serious, flighty, suspicious, caring, and so forth. Leaders often try to influence climate or use it to influence individual members in desirable ways. The group achieves its climate when the attitudes, ideas, and feelings of one or more members of the group become those of the other members by their association. See also reciprocal interactions.