group leadership roles
குழுத் தலைவரின் பொறுப்புகள்
தமிழ் விளக்கம்
சமூகக் குழுப்பணியில் குழுவிற்குத் தலைமை தாங்கிச் செல்பவர்களுக்கு பல்வேறு பொறுப்புக்கள் உள்ளன. அவையாவன - உறுப்பினர்களுக்கு உபயோகமான செய்தி மற்றும் கருத்துக்கள் தந்து உதவுவது. குழுவுக்கான செயல்பாடுகள் மற்றும் இலக்குகள் நிர்ணயிப்பது. குழு செயல்பாடுகளின் அல்லது கருத்துக்களின் தொடர்ச்சியைப் புரிந்துகொள்ள அதை சுருக்கமாகத் திரட்டிச் சொல்வது. குழு உறுப்பினர்களையும் செயல்களையும் ஒருங்கிணைப்பது. குழுவின் பிரச்சனைகளை அறிய உதவுவது. குழுவை ஊக்குவிப்பது, குழுவின் யதார்த்த நிலையைக் கண்டறிந்து சொல்வது, ஏற்றுக்கொண்ட குறிக்கோள் நோக்கி குழு செல்கின்றதா என்று மதிப்பீடு செய்வது, இது தவிர குழுவின் சமூக மற்றும் மனவுணர்வுகளை நிலைத்திருக்கச் செய்ய எல்லோரையும் குழுச் செயல்பாட்டில் பங்கெடுக்க வைத்தல், உறுப்பினர்களுக்கிடையே சமரசம் செய்து வைத்தல், பதற்றத்தைத் தணித்தல், உறுப்பினர்களின் பரஸ்பர உரையாடல்களை சுளுவாக்குதல், உறுப்பினர்களின் உரையாடல்களை கவனமாகக் கேட்டல், குழுவில் நம்பிக்கையான சூழலை உருவாக்குதல் போன்ற பொறுப்புக்களும் அடங்கும்.
English
Activities that an indigenous or professional group leader uses to accomplish the group's goals include giving and seeking information and opinions, proposing tasks and goals, summarizing, coordinating, diagnosing, energizing, testing reality, and evaluating whether goals have been accomplished. Activities that leaders use to maintain the group's social and emotional bonds include encouraging participation, compromising, relieving tension, helping members communicate, setting standards, listening actively, and building a climate of trust for others to emulate.