group psychotherapy

குழு உளச் சிகிச்சை

தமிழ் விளக்கம்

ஒரே மாதிரியான உளப்பிரச்சனைகளுக்கு உள்ளான ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களை ஒரு குழுவாக்கி, அவர்களிடையே பரஸ்பர அனுபவப் பகிர்தலை ஊக்குவித்து சிகிச்சை அளிக்கும் முறை. குழு என்ற வார்த்தை குழு உளச்சிகிச்சை, குழு சிகிச்சை, சமூகக் குழுப்பணி போன்ற நடைமுறைகள் மேலோட்டமாக ஒரே மாதிரியாகத் தெரிந்தாலும், அவற்றிற்கிடையே வேறுபாடுகள் இருக்கின்றன. குழு உளச்சிகிச்சையில் குழுவாக ஒன்றிணையும் நபர்களுக்கு மன ரீதியான பிரச்சனைகள் இருக்கும். குழு சிகிச்சையில் குழுவாக ஒன்றிணையும் நபர்களுக்கு மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் மட்டுமல்ல அதனால் பிறருடன் ஒத்திசைந்து செல்லமுடியாத நடத்தைப் பிரச்சனைகளும் இருக்கும். இவை இரண்டும் பொதுவாக உள்ளம் மற்றும் நடத்தைச் சீர்கேடு உள்ளவர்களை மையப்படுத்தியது. குழு சமூகப்பணி என்பது இன்னும் விரிவான குறிக்கோள்களுடன் செயல்படுவது. அது பிரச்சனைக்குள்ளானவர்களோடு மட்டுமல்ல, பிரச்சனையே இல்லாத வாழ்வின் உயர் நோக்கங்களை அடைய விரும்புவர்களோடும், தலைமைப் பண்பை வளர்த்துக்கொள்ள விரும்புவர்களிடத்திலும் பணியாற்றும் வழிமுறை.

English

A form of psychotherapy that treats individuals simultaneously for emotional and behavioral disorders by emphasizing interactions and mutuality. Most professionals consider the term to be synonymous with group therapy. Some writers, however, make a distinction between group psychotherapy, group therapy, and social group work; they consider group psychotherapy to be only one type of group therapy. Whereas group psychotherapy uses group treatment techniques to help individuals resolve emotional problems, group therapy uses a wider range of intervention strategies to help individuals deal with both social maladjustment and emotional disorders. Social group work, although sharing some of these objectives and techniques, is not limited to treating disorders and problems but includes education support groups and positive group experiences that help healthy individuals achieve greater personal fulfillment and change conditions in the environment and society.