group, structured

கட்டமைக்கப்பட்ட குழுக்கள்

தமிழ் விளக்கம்

சமூகக் குழுப்பணியிலும், குழு சிகிச்சை முறையிலும், குழுவின் கட்டமைப்பே (குழுவில் அனுமதிக்கப்படும் உறுப்பினர்கள், அவர்களின் தன்மை, அவர்களுக்கிடையே ஏற்படும் பரஸ்பரப் பகிர்தல்கள்) குறிக்கோளை அடைய உதவும் வாகனம். ஆகையால் ஒவ்வொரு குழுவிலும் அக்குழு அடைய நினைக்கும் குறிக்கோளை அடைய உதவும், மாறுபட்ட குணவியல்புகளைக் கொண்ட நபர்களை உறுப்பினர்களாக்குவார்கள். ஒரு குழுவைப் பன்முகத் தன்மை கொண்டதாக உருவாக்க திட்டமிடுவதையே கட்டமைக்கப்பட்ட குழு என்பர்.

English

A purposeful bringing together of clients, who meet some predetermined criteria, for social group work or group therapy membership. Because effectiveness is achieved largely by the characteristics each member brings to the group, the social worker or therapist may seek the right balance or structure. For example, the structured group might include at least one outgoing and talkative person, one who is quiet, one who is tense, and one who is relaxed. The opposite of a structured group is not an open group but a blanket group.