group-type conduct disorder
குழு பாதிப்பினால் (நண்பர்களால், கூட்டாளிகளால், சேர்க்கையால்) வரும் நடத்தைக் கோளாறுகள், சகவாச தோஷம்
தமிழ் விளக்கம்
குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தில் கூடா நட்பால் ஏற்படும் நடத்தைக் கோளாறு. பொய் சொல்லல், திருடுதல், சோம்பல், பள்ளி / வேலைக்குச் செல்லாமை, மது / போதைப் பழக்கம், இலகுவாக எரிச்சலடைதல், விசமத்தனம், மனிதர்கள் மற்றும் வளர்ப்பு பிராணிகள் மீது வன்முறை, சமூக விரோத மற்றும் அழிவு நடத்தையில் ஈடுபடுதல் போன்றவை நடத்தைக் கோளாறின் வெளிப்பாடுகள். இக்கோளாறுள்ளவர்கள் அவர்கள் வயதிற்கு ஒவ்வாத, பிறர் எதிர்பார்ப்பிற்கு இணங்காத காரியங்களில் ஈடுபடுவார்.
English
One of the three types of conduct disorder, in which the maladaptive behavior occurs as part of a gang or group of peers. The other types are solitary aggressive–conduct disorder and “undifferentiated type.”