guidance counselor

வழிகாட்டும் ஆலோசகர்கள்

தமிழ் விளக்கம்

பணியாளர் மற்றும் மாணவர்களுக்கான செய்தொழில் வாய்ப்புக்களைத் தெரிவிக்க, வேலை மற்றும் கற்றல் பழக்க வழக்கங்களில் ஆரோக்கியமான மாற்றங்கள் ஏற்படுத்த, பிரச்சனைகளைத் தீர்த்துவைக்க கல்வி நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் வழிகாட்டும் ஆலோசகர்கள் பணிபுரிகின்றார்கள். சரியான குறிக்கோளை நிர்ணயிக்க உதவுவது, குறிக்கோளை அடைய பல்வேறு மாற்று வழிகளின் தன்மையை விளக்கிச் சொல்வது, உபயோகமான தகவல் மற்றும் அறிவுரை தருவது, குறிக்கோள் / பிரச்சனை சம்பந்தமான பிரக்ஞையை மேம்படுத்துவது போன்ற செயல்களில் தொழில்முறை நிபுணத்துவமும் திறமையும் கொண்டவர்களாக இவர்கள் இருப்பார்கள்.

English

A professional who is knowledgeable and skilled in delineating alternatives, articulating goals, providing information and advice, and facilitating client self-awareness. Guidance counselors are frequently employed in educational institutions and personnel offices of business organizations to provide guidance in vocation opportunities, work and study habits, and problem resolution.