Gulf War syndrome

வளைகுடாப் போர் நோய்க்குறி

தமிழ் விளக்கம்

இரசாயன ஆயுதங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள், கதிர்வீச்சு, எண்ணெய்க் கிணறுகளின் புகை, பல்வேறு நோய்த்தடுப்பு மருந்துகள், தடுப்பூசி எடுத்துக் கொண்டமை, போரின்போது ஏற்பட்ட தொற்றுநோய்கள் போன்றவற்றின் விளைவுகளால் வளைகுடாப் போரில் (குவைத் இராக் போர் 1990 1991) பங்கேற்ற அமெரிக்க இராணுவ வீரர்கள் அனுபவித்த பல்வேறு நோய்க்குறிகள். சோர்வு, தலைவலி, மூட்டுவலி, தோல் கொப்புளங்கள், வாந்தி, தலைசுற்றல், சுவாசக்கோளாறுகள் போன்றவை இதில் அடங்கும்.

English

A series of symptoms, including vision loss, headaches, skin rashes, and joint pain, found in a significant number of soldiers who served in the Kuwait–Iraq military action in 1990–1991.