gun control
துப்பாக்கிக் கட்டுப்பாடு, சுடுகலன்கள் (துப்பாக்கி) விற்பனை, உரிமை மற்றும் பயன்படுத்துதல் மீதான கட்டுப்பாடுகள்
தமிழ் விளக்கம்
1981 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகனை, ஜான் கிங்க்லே (John Hinckley, Jr) என்பவர் துப்பாக்கியால் சுடமுயன்ற போது அவருடைய உதவியாளர் (ஜேம்ஸ் பிராடி James Brady) என்பவர் சுடப்பட்டு அதைத் தொடர்ந்து அவர் பக்கவாதத்தால் முடங்கியது, அமெரிக்காவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கைத்துப்பாக்கிகள் வினியோகம் மற்றும் பயன்படுத்துபவர்களைக் கண்காணிக்க, அரசை நிர்பந்திக்க பல இயக்கங்கள் போராடியதன் விளைவாக அறிமுகப்படுத்தப்பட்ட சட்டம்தான் பிராடி கைத்துப்பாக்கி வன்முறைத் தடுப்பு சட்டம். துப்பாக்கிகளைப் பயன்படுத்துவதில் உலக நாடுகள் பலவற்றிலும் கடுமையான கட்டுப்பாடுகளும், கண்காணித்தாலும் இருக்கின்றன. இருப்பினும் அமெரிக்காவில் பள்ளி, கல்லூரி, வழிபாட்டுத் தலங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுடும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து அதில் பலர் உயிரிழக்க நேரிட்டாலும், துப்பாக்கி விற்பனை, பயன்பாடு தொடர்பான கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க வகை செய்யும் மசோதாவிற்கு அமெரிக்க செனட்சபை ஒப்புதலளிக்கவில்லை.
English
Laws and other efforts by governments and citizens to regulate the acquisition and use of firearms. Most nations have stringent gun controls that make it difficult to possess firearms; firearm use for those who get permission is strictly monitored. The United States is an exception. The Second Amendment of the U.S. Constitution states, “A well-regulated militia, being necessary to the security of a free state, the right of the people to keep and bear arms, shall not be infringed.” Although gun control advocates interpret this amendment to refer to the military, opponents say the amendment gives citizens the right to possess and carry guns with only limited, if any, controls. See also Brady Bill.