Hart, Hastings Hornell

ஹார்ட், ஹேஸ்டிங்ஸ் கார்னல் (1851–1932)

தமிழ் விளக்கம்

சிறைச்சாலை சீர்திருத்தவாதி. சிறார்களைக் காக்க இயக்கம் கட்டியவர். சிறார் நீதிமன்ற அமைப்பை மேம்படுத்த உதவியவர். பிரதிவாதிகளின் உரிமைக்காகப் போராடியவர். நன்னடத்தையின் பேரில் கைதிகள் விடுப்பில் செல்லும் வழக்கத்தை உருவாக்க உதவியவர். ஆதரவற்ற குழந்தைகள் சரியாக மேற்பார்வையிடப்படாததால், அவர்களுக்குத் தேவையான பாதுகாப்பை செய்துதர முடியவில்லை என்று வாதிட்டவர். ரஸ்சல் சேஜ் அறக்கட்டளையின் பாலர் உதவி, சிறார் குற்றங்கள் மற்றும் சிறைச்சாலை நிர்வாகம் போன்ற பணிகளில் பல வருடங்கள் ஆலோசகராகச் செயல்பட்டார்.

English

(1851–1932) Prison reformer and leader of the child-saving movement, Hart helped develop the juvenile court system, championed defendant's rights, and established the federal parole system. He criticized then-current efforts to place out orphaned children as being too unsupervised to protect them. For many years he was consultant on child help, delinquency, and penology to the Russell Sage Foundation.