Haynes, George E.

ஹைனஸ், ஜார்ஜ் இ (1880–1960)

தமிழ் விளக்கம்

அமெரிக்காவின் முதல் சமூகப்பணிக் கல்லூரியான நியூயார்க் மனிதநேயக் கல்லூரியில் (New York School of Philanthropy) பட்டம் பெற்ற முதல் கறுப்பின மாணவர். இவர் ரூத் ஸ்டாண்டிஸ் பால்ட்வின் அவர்களோடு இணைந்து நகரங்களுக்கான தேசியச் சங்கத்தை உருவாக்கியவர். கறுப்பின மக்கள் இடம்பெயர்வதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றிய விஷயஞானத்தில் நிபுணத்துவம் பெற்றவர்.

English

(1880–1960)Cofounder, with Ruth Standish Baldwin, of the National Urban League, Haynes was the first black graduate of the New York School of Philanthropy and was an authority on the effects of migration on black people.