hazardous substances
ஆரோக்கியக் கேடு விளைவிக்கும் நச்சுத் தன்மையுள்ள அபாயகரமான பொருட்கள்
தமிழ் விளக்கம்
உயிரினங்களுக்கோ, மக்களுக்கோ, சொத்துக்களுக்கோ, சூழலுக்கோ ஆபத்தை விளைவிக்கும் திட,திரவ வாயுப் பொருட்கள். இப்பொருட்களால் கதிர்வீச்சுத்தன்மை, தீப்பற்றும் தன்மை, வெடிக்கும் தன்மை, துருப்பிடிக்கும் / அரிக்கும் தன்மை, ஆக்ஸிஜனேற்றம், மூச்சுத்தினறல் உண்டாகும். ஒவ்வாமை, மற்றும் உயிரி நச்சுக்கள் இந்த மாதிரியான பொருட்களில் அடக்கம். காற்று மூலமாகவோ, நீர் மூலமாகவோ, தோல் மூலமாமாகவோ மனித உடலுக்குள் புகும்போது புற்றுநோய், மூளை பாதிப்பு, சுவாசக் கோளாறு, கருச்சிதைவு போன்ற குறைபாடுகள் ஏற்படலாம். ஆபத்தை விளைவிக்கும் இந்த மாதிரியான பொருட்களின் உற்பத்தி, உற்பத்தி முறைகள், அதன் எச்சங்களைக் கையாளுதல் போன்ற செயல்களுக்கு பல நாடுகளில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
English
Manufactured materials or their residue (or some products of nature) that can lead an exposed person to immediate or gradual illness or death. These substances are often associated with cancer, brain damage, respiratory diseases, birth defects, and reproductive damage. Exposure is usually through air or drinking water. Most toxic dumps are near population centers and directly above groundwater supplies. Exposure to some of these substances occurs in homes where asbestos, lead, and radon (a natural radioactive gas) are often found.