HCFA

சுகாதாரப் பணிகளுக்கான நிதியம், மருத்துவ சேவைகளுக்கான நிதி நிர்வாகம்

தமிழ் விளக்கம்

கடந்த காலத்தில் மருத்துவ சேவைகளுக்கான நிதி நிர்வாகம் (Health Care Financing Administration (HCFA) என்றழைக்கப்பட்ட அமைப்பு, தற்போது மருத்துவம் & மருத்துவ சேவைகள் மையங்கள் (Centers for Medicare & Medicaid Services (CMS) என்றழைக்கப்ப்டுகின்றது. இந்நிறுவனம் அமெரிக்க அரசின் சுகாதாரம் மற்றும் மனித சேவைத் துறையின் கீழ் செயல்படும் அமைப்பு. மாநில அரசுகளின் பங்கேற்புடன் நடத்தப்படும் மருத்துவ உதவிகள், ஒவ்வொரு மாநிலத்திலும் செயல்பட்டு வருகின்ற குழந்தைகள் நலக் காப்பீட்டுத் திட்டங்களுக்கு உதவியும் ஆலோசனையும், மருத்துவக் காப்பீடு நிறுவனங்களின் சேவை மற்றும் செயல்திறனைக் கண்காணித்து வரும் நிறுவனமாகும். இந்நிறுவனம் மருத்துவக் காப்பீடு நிறுவனங்களின் நிர்வாக முறைகளை எளிமைப்படுத்த, செயல்திறனைக் கண்காணிக்க, பொறுப்புணர்வை உணர்ந்து கொண்டு செயலாற்ற, நீண்ட கால மருத்துவப் பராமரிப்பிற்கான நலம் பேணகங்களின் (Nursing Homes) தரத்தை உறுதி செய்ய, மருத்துவ ஆய்வகங்களின் தரத்தைக் கண்காணிக்க என்று பல பொறுப்புகளை எடுத்துச் செயலாற்றும் நிறுவனம்.

English

See Health Care Financing Administration (HCFA).