Health Care Financing Administration (HCFA)

சுகாதாரப் பணிகளுக்கான நிதியம், ஆரோக்கியப் பராமரிப்பிற்கான நிதி நிர்வாகம்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் ஆரோக்கியம் மற்றும் மனித சேவைத் துறையின் நிர்வாக அமைப்பு. இந்த அமைப்பு அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு எப்படி செயல்படுகின்றது, அதற்கு எப்படி நிதியுதவி அளிக்கப்படுகின்றது என்பதை மதிப்பீடு செய்வதற்கும், சமூகப் பாதுகாப்பு நிர்வாகத்துடனும், மாநிலப் பொது உதவித் துறைகளுடன் இணைந்து மருத்துவ வசதிகள் எப்படி வழங்கப்படுகின்றது என்பதை மேற்பார்வையிடவும் அதிகாரம் பெற்ற அமைப்பு. இந்த அமைப்புதான் மருத்துவ சேவைகள் வழங்கும் மருத்துவமனைகள், செவிலியர்களுக்கான திறன்கள், அந்திம இல்லங்கள், பிணியாளர் பேணுகை இல்லங்களின் தரங்களை நிர்ணயம் செய்கின்றது.

English

The organization within the U.S. Department of Health and Human Services (HHS) that assesses the nation's health care programs and their financing and oversees Medicare in cooperation with the Social Security Administration (SSA) and Medicaid in cooperation with state departments of public assistance. HCFA sets the standards that hospitals, skilled-nursing facilities, and hospices must meet to be certified to provide Medicare services.