health maintenance organization (HMO)
ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பு
தமிழ் விளக்கம்
நிலையான வருடாந்திரக் கட்டணத்தை சந்தாவாகப் பெற்றுக்கொண்டு, உறுப்பினர்களுக்கு விரிவான மருத்துவ (ஆரோக்கிய பாதுகாப்பு) சேவைகளை வழங்கும் மருத்துவக்குழு. அமெரிக்க நாட்டின் ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்புச் சட்டத்தின் படி, 25 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனம், மைய அரசு அங்கீகரித்த ஏதாவதொரு ஆரோக்கியப் பராமரிப்பு அமைப்பைத் தேர்வு செய்து, அந்த அமைப்பு பிரேரபிக்கும் கட்டணத்தைச் செலுத்தும்போது, அவர்களிடம் அனுப்பப்படும் நோயாளிகளுக்கு சில வரையறைகளுக்குட்பட்டு சிகிச்சை அளிப்பார்கள். இது மருத்துவக்காப்பீட்டு திட்டங்களிலிருந்து வேறுபட்டது
English
A comprehensive health care program and medical group that offers services for a fixed annual fee. In this alternative to the fee-for-service model, enrollees voluntarily prepay for their medical and health care, including treatment and prevention of physical and mental illness. HMOs usually have their own medical care facilities, staffed by physicians of all specialties as well as social workers and other health care providers. See also managed health care program and independent practice associations (IPAs).