Health Resources Administration (HRA)

ஆரோக்கியத்திற்கான வசதிகளை / ஆதாரங்களை நிர்வகித்தல்

தமிழ் விளக்கம்

அமெரிக்க அரசின் பொது சுகாதாரத் துறையின் ஒரு நிர்வாக உறுப்பு. நாட்டின் மருத்துவ வசதிகளின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதன் தரத்தைப் பேனவும், மருத்துவச் செலவினங்களைக் குறைக்கவுமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ஆரோக்கியப் பணியாளர்களின் பயிற்சிக்கான நிதியுதவி, மருத்துவ வசதிகளும், பணியாளர்களும் நாடுமுழுவதும் பரவலாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளல், தேவையான மருத்துவக் கட்டமைப்பு வசதிகள் உருவாக்கத் தூண்டுகோலாயிருத்தல், மருத்துவத் தேவைகளை முன்கூட்டியே கணித்தல் போன்ற பல்வேறு பொறுப்புகள் இந்த நிறுவனத்திற்கு உண்டு.

English

The organization within the U.S. Public Health Service whose mission is to maintain and improve the utilization, quality, and cost-effectiveness of the nation's health care system. HRA helps fund the training of health care personnel, facilitates the appropriate distribution of health resources and personnel, stimulates the construction of needed health care facilities, and identifies anticipated health resource problems.