heart disease
இதய நோய்
தமிழ் விளக்கம்
அறுபதுக்கும் மேற்பட்ட இதய நோய்களால் மனிதர்கள் சிரமப்படுவதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். அதில் சில வகைகள். 1.கரோனரி இதய நோய்: கரோனரி இதய நோய் மேலும் கரோனரி தமனி நோய் என்றும் அழைக்கப்படுகிறது. இது இதயத்திற்கு இரத்தம் அளிக்கும் கரோனரி தமனிகளை. பாதிக்கிறது அல்லது சேதம் ஏற்படுத்துகிறது. 2. மார்பு முடக்குவலி: ஆஞ்சினா அல்லது ஆஞ்சினா பெக்டோரிஸ் என்பது ஒரு நிலை அல்லது இதய நோய் அறிகுறியாகும். அது இதயம் போதுமான இரத்தம் பெற முடியாது போது ஏற்படும். மார்பு பகுதியில் நச்சரிக்கும் வலி, இறுக்கம் அசௌகரியம் உணர்வு ஏற்படும். 3. கார்டியோமயோபதி (இதயத் தசைநோய்) கார்டியோமயோபதி என்பது உடல் முழுவதும் இரத்தத்தைப் பாய்ச்சுவதற்கு உதவும் இதயத் தசை பலவீனமடைந்த நிலையாகும். 4. பிறவியிலேயே இதய நோய்: இது பிறக்கும் போதே, இதயத்தில் காணப்படும் (செயல்பாட்டு கட்டமைப்பு) ஒரு குறைபாடு ஆகும். 5. குருதி ஊட்டக்குறை (Arrhythmia): இது முறையற்ற மின் தூண்டுதலினால் இதயம் பெறும் ஒரு ஒழுங்கற்ற இதய துடிப்பு நிலைமையாகும். இது இதயம் மிக வேகமாக (tachycardia) அல்லது மிக மெதுவாக (bradychardia) துடிக்கக் காரணமாகும். 6. இதயச் செயலிழப்பு (Congestive heart failure): இதயம் திறம்பட உடல் முழுவதும் இரத்தத்தைச் சுழற்சி செய்ய முடியவில்லை எனும் போது இதய செயலிழப்பு ஏற்படுகிறது. ஏனெனில் இதயச் செயலிழப்பு காரணமாக அதிக திரவம் உடலில் சேரும் போது அதிகப்படியான திரவத்தை வடிகட்டும் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்பட்டு மற்றும் நெரிசல் ஏற்பட்டு இதயச் செயலிழப்பு ஏற்படுகிறது. 7. Atrial fibrillation: இது விரைவான மின் தூண்டுதலினால் ஏற்படும் அசாதாரணமான வேகத்தின் காரணமாக, இதயத்தில் நடுக்கம் ஏற்பட்டு, இதயம் மிகவும் வேகமாகவும் மற்றும் ஒழுங்கற்ற முறையிலும் சுருங்குவதால் ஏற்படுவதாகும். 8. இதய வீக்கம் (மையோகார்டிஸ் மற்றும் பெரிகார்டிடிட்ஸ்): வைரஸ் தொற்று காரணமாக இதயத் திசுவில் அழற்சி ஏற்பட்டு இதயம் வீக்கமடையும் நிலையாகும். 9. இதய இறப்பு (Myocardial infarction): இது மாரடைப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சிக்கலான சொல். இரத்த நாளங்கள் சுருக்கமடைவதின் காரணமாக இதய இரத்த ஓட்டம் முற்றிலும் தடுக்கப்படும் போது ஏற்படுகிறது. 10. குருதியோட்டக்குறை இதய நோய் (Ischemic heart disease): இரத்த நாளங்களின் ஒரு பகுதி அடைப்பின் காரணமாக இதயத்திற்கு இரத்த ஓட்டம் குறைக்கப்படுவதால் ஏற்படுகிற்து. இது மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்கள் ஏற்படுவதற்கும் வழி வகுக்கும்.
English
A term for any of a variety of disorders affecting the heart muscle, adjacent tissue, and the circulatory system. Heart disease is the leading cause of death among men older than age 40. Those with increased risk include smokers, people with diabetes, people with high blood pressure, and individuals with high serum cholesterol.