help line

உதவிக்கான (தொலைபேசி) தொடர்பு

தமிழ் விளக்கம்

தயரத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யத் தொண்டு நிறுவனங்கள் மூலம் இயக்கப்படும் தொலைபேசித் தொடர்பு. அதீத மனச்சோர்வினால் தற்கொலை செய்துகொள்ள நினைப்பவர்கள், குடும்பச் சச்சரவுகளினால் வன்முறைக்கு உள்ளானவர்கள், வீட்டைவிட்டு வெளியேறியவர்கள், வேறுவகையில் உதவியோ தகவலோ தேவைப்படுபவர்கள் உதவியின் பொருட்டு தொலைபேசியில் தொடர்புகொள்ளும் போது, நிபுணர்களோ அல்லது தன்னார்வத் தொண்டர்களோ தொலைபேசி வழியாக அவர்களிடம் மனமாற்றம் ஏற்படும்படியான ஆறுதல் வார்த்தைகள் சொல்லியும், அவர்களுக்குத் தேவைப்படும் உதவிகளைப் பெற வழிகாட்டியும் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுவார்கள்.

English

A telephone-based social service to provide contact between people in need of assistance and professionals or volunteers who provide encouragement and access to necessary services. Trained listeners are immediately available for callers, especially those at risk of suicide and family violence and runaways and those seeking information about how to get needed services. The term is often used interchangeably with hot line, although the latter may also emphasize communications such as whistle blowing, where the caller is not seeking help but providing information. See also Nineline.