help-rejecting complaining
உதவியை நிராகரித்து குற்றமுறைத்தல், எந்த உதவியிலும் மனக்குறை காணல், துயர்ப்பாடல்
தமிழ் விளக்கம்
ஒருவரின் உதவிக்கான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டும், செய்யப்பட்ட உதவியின் மீது மனக்குறை காண்பவர். பெரும்பாலும் தங்களுடைய மனக்குழப்பம், சுய பச்சாதாபம், பிறர் மீதான வெறுப்புணர்ச்சியைச் சாதுர்யமாக மறைக்க இது மாதிரியான குறைகளைச் சொல்லுவர். இந்த மனோபாவம் பொதுவாக தர்பூசனையாளர்களிடத்திலும் (narcissistic), நோய் பீதி (hypochondriasis) உள்ளவர்களிடத்திலும் காணப்படும்.
English
A pattern of complaining and appeals for help followed by explanations about why the offer of assistance was deficient. One who engages in this behavior is often dealing with emotional conflicts and seeks help to disguise unconscious feelings of hostility and self-pity. The pattern is often seen in hypochondriasis and narcissistic personality disorder.