helping network

உதவிக்கான கூட்டமைப்பு, உதவிக்கான உடனினைவு

தமிழ் விளக்கம்

பிரச்சனைகளுக்குரியவர்களுக்கோ அல்லது தேவையுடையவர்களுக்கோ ஆதரவளிக்கவும், தேவையான உதவியளிக்கவும், பிற உதவிகளை அணுகிப் பெற வழிகாட்டவும் தங்களுக்கு இயன்ற அளவிலோ அல்லது பிறருடன் இணைந்தோ உதவ முன்வருகின்ற தனிமனிதர்கள், குழுக்கள், குடும்பங்கள், அரசு மற்றும் பிற சமூக / தொண்டு நிறுவனங்களை உதவிக்கான கூட்டிணைவு என்று சொல்லலாம். உதவிக்கான கூட்டிணைவு என்பது சமூகக் கூட்டிணைவிலிருந்து (Social Network) வேறுபட்டது. தங்களிடம் உதவி கேட்பவர்களின் வேண்டுதல்களுக்காக மட்டும் செயல்படும் தன்மை கொண்டது. உதவிக்கான கூட்டிணைவுக்கு மாறாக சமூக கூட்டிணைவு இன்னும் விரிவான தளங்களில் செயல்படுவது.

English

A linkage comprising various combinations of individuals, groups, families, organizations, government offices, or social agencies and so forth, all of which work together or autonomously to provide a person with the supports, resources, information, and access that is required for problem solving or meeting a need. Helping networks differ from social networks in that they are linked only with respect to the help they seek to provide, whereas social networks have far more bases for their existence. One form of helping network is the natural helping network. See also collaboration.