Henrician Poor Law

ஹென்றியின் வறியவர் சட்டம்

தமிழ் விளக்கம்

எட்டாம் ஹென்றியின் (1536) ஆட்சிக்காலத்தில் திடகாத்திரமான வறியவர்கள் பிச்சையெடுப்பதைத் தடுக்கவும், அவர்களை எப்படிக் கையாள்வது என்பது பற்றிய வழிமுறைகளைக் காட்டிய சட்டம். திடகாத்திரமான நாடோடிகள் (சோம்பித்திரியும் கயவர்கள்) மற்றும் பிச்சைக்காரர்களைத் தண்டிக்கும் சட்டம் என்று பெயரிடப்பட்ட இச்சட்டத்தின்படி, உள்ளூர் அரசுகளிடம் பிச்சைக்காரர்களைக் கையாளுவதற்கு வரிவசூலிக்கும் உரிமையும், அவர்களைத் தண்டிக்கும் உரிமையும் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி ஊனமுற்ற பிச்சைக்காரர்களைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொடுத்து பிச்சை எடுத்தலைத் தவிர்க்க வேண்டும். அதையும் மீறிப் பிச்சை எடுப்பவர்களுக்கு அடையாளச் சூடு இடவும், சிறையிலிடவும், அவர்களிடமிருந்து குழந்தைகளைப் பிரிக்கவும், சட்டத்தை மீறித் தொடர்ந்து பிச்சை எடுப்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கவும் இச்சட்டத்தின் மூலம் வழி செய்யப்பட்டது.

English

The English legislation, enacted in 1536 during the reign of King Henry VIII, whose primary purpose was to organize the ways the nation would deal with its“able-bodied”poor population. Officially named“The Act for the Punishment of Sturdy Vagabonds and Beggars,”it placed responsibility for the care of the poor with local officials who could collect taxes for the purpose. The officials furnished work for unemployed people and restricted begging to people with disabilities. Penalties for begging by the able-bodied included branding; enslavement; removal of their children; and for repeated offenses, execution.