hepatitis
கல்லீரல் அழற்சி, கல்லீரல் வீக்கம், மஞ்சள் காமாலை
தமிழ் விளக்கம்
கல்லீரல் அழற்சி (Hepatitis) (பன்மை hepatitides ) என்பது உடலில் உள்ள கல்லீரல் அழற்சி அல்லது வீக்கம் கொள்வதாகும். கல்லீரல் உறுப்பின் திசுக்கள் சார்ந்த உயிரணுக்கள் வீக்கத்துடன் காணப்படுவதே அதன் அறிகுறியாகும். இந்தப் பெயரானது பண்டைய கிரேக்கமொழிச் சொல்லான ஹெபர் (ἧπαρ) என்பதிலிருந்து வந்ததாகும், இதன் மூலச்சொல் ஹெபட் (ἡπατ-) ஆகும். இது கல்லீரல் என்ற பொருளையும், அதன் பின் ஒட்டுச்சொல்லான -இடிஸ் (-itis) என்பது 'அழற்சி அல்லது வீக்கம்' என்ற பொருளையும் கொண்டு, கல்லீரல் அழற்சி எனப்படுகிறது. வைரஸ் கிருமி தொற்றால் கல்லீரலில் அழற்சி ஏற்படுகிறது. கல்லீரலைத் தாக்கும் ஐந்து வகையான வைரஸ் கிருமிகள் (A-B-C-D-E) இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஐந்து வகைகளும் ஏற்படுத்தும் நோய்களாலும், வேகமாகத் தொற்றக்கூடிய தன்மையாலும், அதையொட்டி நிகழ்கின்ற மரணங்களாலும், ஆபத்தானவையாகக் கருதப்படுகின்றன. உணவு, நீர், மற்றும் அசுத்தமான மருத்துவ உபகரணங்கள் மூலம் செய்யப்படும் குருதி ஏற்றத்தாலும், மதுப் பழக்கத்தாலும், ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் ஏற்படும் ஈரலரிப்பு முதலிய காரணங்களால் பரவும் தன்மை கொண்டது. குமட்டல், வாந்தி, பலவீனம், பசியின்மை, கண்கள், தோல் மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாதல் இந்நோயின் அறிகுறிகளாகும்.
English
A viral disease resulting in swelling and inflammation of the liver. Symptoms include nausea, fever, weakness, loss of appetite, and often jaundice. Treatment involves extensive bed rest and controlled diet. The virus is spread by contact with contaminated food or water (infectious hepatitis), injections of contaminated blood, or the use of contaminated needles (serum hepatitis). It also sometimes occurs as a complication of other diseases, such as cirrhosis of the liver, mononucleosis, and dysentery.