heredity

பரம்பரையாய் அமையும் பண்புடைமை, பாரம்பரியம், மரபுவழி, மரபுரிமையாய் அமையக்கூடிய

தமிழ் விளக்கம்

1. பாரம்பரியம் (Heredity) எனப்படுவது முன்னோர்கள் அல்லது பெற்றோர்களின் இயல்புகள், சந்ததிகளுக்குக் கடத்தப்படும் செயல்முறையாகும். இது பெற்றோருடைய குணநலங்கள் மரபணுக்கள் எனும் குரோமோசோம்கள் மூலமாகப் பிள்ளைகளுக்குப் பரவுதல். சந்ததியின் உயிரணு அல்லது உயிரினம் உருவாகும்போதே, பெற்றோர் உயிரணு அல்லது உயிரினத்தில் இருந்து இயல்புகளைப் பெற்றுக் கொள்வது இந்தச் செயல் முறையினாலேயே ஆகும். இந்தப் பாரம்பரியச் செயல்முறையின்போது, இயற்கையாகவும், சூழல் தாக்கத்தினாலும் உயிரினங்களில் வேறுபாடுகளும் தோன்றுவதனால், அவற்றில் புதிய இயல்புகள் உருவாகி, புதிய இனங்களும் தோன்றும். உயிரியலில் பாரம்பரியம் பற்றிய கல்வி மரபியல் (Genetics) எனப்படும்.

English

1. The transmission of characteristics from parents to offspring through chromosomes that bear the genes. 2. The tendency of an individual to manifest the traits of his or her progenitors. See also chromosomal disorders and genetic disorder.