heroin
போதைமிகு அபின், அபினிலிருந்து தயாரிக்கப்பெறும் உணர்விழக்கச்செய்யும், தூக்கமூட்டும் மயக்க மருந்து
தமிழ் விளக்கம்
அபினி அல்லது அபின் என்பது போதையூட்டுகிற, வலிநீக்கி மருந்துப்பொருள் ஆகும். இது அபினிச் செடியில் (Papaver somniferum L. அல்லது paeoniflorum) இருந்து தயாரிக்கப்படும் வெள்ளை நிறமான, மணமற்ற, கசப்புச் சுவையுடைய படிகம் (C17H17NO(C2H3O2)2). இதை மூக்கு வழியாக உறிஞ்சினாலோ, ஊசி மூலம் இரத்ததில் செலுத்தினாலோ உடலெல்லாம் பாலின்பத்தின்போது அனுபவிக்கும் பரவச நிலையை அனுபவிப்பர். இந்த உணர்வு நிலையை அனுபவித்தவர்கள் மீண்டும் மீண்டும் அனுபவிக்கத் தூண்டப்பட்டு இதற்கு அடிமையாவார்கள். இதன் தரத்தைக் கட்டுப்படுத்த முடியாதாகையால் இதன் உபயோகம் மரணத்தில் முடிகின்றது. பல நாடுகளில் அபின் தடை செய்யப்பட்டதாயும், விலை அதிகமுள்ளதாயும் இருப்பதால் சர்வதேசக் குற்றத் தொடர்புடைய கூட்டமைப்புகள் இதன் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், சட்டத்துக்கு அமைவான அபினி உற்பத்தி, ஐக்கிய நாடுகள் அமைப்பினதும், வேறு அனைத்துலக ஒப்பந்தங்களினாலும் கட்டுப்படுத்தப்படுவதுடன், தனிப்பட்ட நாடுகளின் சட்ட அமுலாக்க அமைப்புக்களின் கடுமையான கண்காணிப்புக்கும் உட்படுகின்றது.
English
A potent narcotic synthesized from morphine. It can be snorted or injected under the skin or into a vein (“mainlining”). Its effect on the user is euphoria or apathy, and for some, a“rush”—a sensation described as similar to an orgasm throughout the entire body. Once addicted, the user also seeks further doses to avoid the intensely discomforting experience of withdrawal symptoms. Heroin is highly addictive and, partly because of its high cost and nonexistent quality control, contributes to an increased death rate and to higher incidence of organized and street crime. Heroin use is illegal in most nations. See also opioid abuse and methadone treatment.