heterosexism

மாற்றுப் பாலின நாட்டமே இயல்பானதென்ற கருத்து, ஓரினச் சேர்க்கையாளர்கள் மீதான பாரபட்சம்

தமிழ் விளக்கம்

சமூகக் கலாச்சார மற்றும் நிறுவன ரீதியாக ஓரினச் சேர்கையாளர்களுக்கு எதிராகக் காட்டப்படும் பாரபட்சம். இப்பாரபட்சம் பல வடிவங்களில் வெளிப்படலாம். ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் நிலை ஒருபுறம். ஓரினச் சேர்க்கையாளர்களின் தனிமனித உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவது - ஓரினச் சேர்க்கையுள்ள தாய்மார்களுக்கு குழந்தைப் பராமரிப்பு உரிமைகள் மறுக்கப்படுதல், பரம்பரை உரிமைகள் மறுக்கப்படுதல், ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் தர மறுத்தல் போன்று பலவடிவங்களில் பாரபட்சம் வெளிப்படும்.

English

Institutional and sociocultural arrangements that discriminate against people who are homosexual. These arrangements may be actively discriminatory, as in military regulations against homosexuals or court decisions about lesbian mothers and child custody. Or it may occur through omission of equal rights, such as the lack of marriage and inheritance rights for homosexual partners. Heterosexism is the equivalent in society to homophobia in individuals.