hierarchy of needs

தேவைகளின் வரிசை, தேவைகளின் படிநிலை வரிசை, தேவை படியமைப்புக் கோட்பாடு

தமிழ் விளக்கம்

தேவைகளின் படிநிலை வரிசைக் கோட்பாடு (Maslow's hierarchy of needs) என்பது ஆப்ரஹாம் மாஸ்லோ (Abraham Maslow) என்ற உளவியலாளராலும், மற்ற மனித நேய உளவியலார்களாலும் முன்மொழியப்பட்ட உளவியல் கருத்தாக்கம். மனிதன் என்பவன் முடிவில்லாத பலவிதத் தேவைகளைக் கொண்டிருபவன். ஒரு தேவை பூர்த்தியானதுடன் அவன் இன்னொரு தேவையின் திருப்தியினை நாடி நிற்பான் எனவும், இத்தகைய தேவைகள் ஏறு வரிசை அமைப்பாகக் காணப்படும் என்றும் கூறினர். இந்தத் தேவைகள் 5 வகையாகப் பிரிக்கப்பட்டது. 1. உடலியற் தேவைகள் (Physiological needs) 2. பாதுகாப்புத் தேவைகள் (Safety needs) 3. சமூக / தோழமையுணர்வு தேவைகள் (Love/Belonging needs) 4. கௌரவ / பிறரால் ஆங்கீகரிக்கப்பட வேண்டுமென்ற தேவைகள் (Esteem needs) 5. தன்னுணர்வுத் தேவைகள் (Self-actualization)
இக்கோட்பாடு பற்றிய விமர்சனங்கள். தேவைகள் மேற்குறிப்பிட்ட வரிசைப்படியே மனிதனுக்குத் தோன்றும் என்பதற்கு எவ்விதமான கட்டுபாடுகளும் இல்லை. இக் கோட்பாட்டில் வயது கருத்தில் கொள்ளப்படவில்லை. வயது மாற்றத்துடன் மானிடத் தேவைகளும் மாற்றமுறும் என்பது வெளிப்படையாகும். ஒவ்வொருவருக்கும் தேவைகள் வித்தியாசப்படும்.

English

The view developed in 1954 by Abraham Maslow and other professionals with a humanistic orientation that people's needs occur in ascending order. One fulfills physiological needs first, followed by needs for safety, belonging, self-respect and self-worth, and finally self-actualization or achieving one's full potential. See also motivation.