histrionic personality disorder
நாடகப்பாங்கான, நாடகப்பண்புவாய்ந்த, செயற்கையான நடத்தையுள்ள ஆளுமைச் சீர்கேடு
தமிழ் விளக்கம்
பதினோரு வகையான ஆளுமைச் சீர்கேடுகளில் இதுவும் ஒன்று. நாடகத் தன்மையான நடத்தை, சிறு சம்பவங்களுக்குக்கூட கூட அதிகமாக எதிர்வினையாற்றுதல், மற்றவர்களின் கவனம் மற்றும் அங்கீகாரத்திற்காக ஏங்குதல், சண்டித்தனம் செய்தல், உண்மைத் தன்மையின்மை, இரட்டை அர்த்தமுள்ள சைகைகள், தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டுதல் போன்ற பல்வேறு நடத்தைகள் இந்தச் சீர்கேட்டின் அறிகுறிகள். இந்தச் சீர்கேடுடையவர்களை நரம்புத் தளர்ச்சி (மனயிசிவு, உள வெறுப்பு, அச்ச வெறி) நோயுள்ளவர்களாகக் குறிப்பர்.
English
One of the 11 types of personality disorders with all or many of the following characteristics: overly dramatic behavior, overreaction to minor events, craving for attention and excitement, tantrums, appearance to others of shallowness and lack of genuineness, apparent helplessness and dependence, proneness to manipulative gestures, and threats of suicide. A person who has this disorder is commonly referred to as a“hysterical personality”or a “hysteric.”