HIV disease

பெறப்பட்ட நோய்த்தடுப்பாற்றல் குறைபாடுகளின் நோய்க்கூட்டறிகுறி, பெறப்பட்ட மனித நோய் எதிர்ப்புத் திறன் குறைபாட்டு நோய்க்கூட்டறிகுறி (Acquired immune deficiency syndrome)

தமிழ் விளக்கம்

எய்ட்ஸ் எனும் இந்த நோய் மனிதனின் நோய் எதிர்ப்பாற்றலைக் குறைக்கும் திறன் கொண்ட தீ நுண்மத்தால் (Virous HIV ) ஏற்படுகிற ஒரு நோயாகும். இந்த நோயானது மனிதர்களின் நோய் எதிர்ப்பாற்றலைப் படிப்படியாகக் குறைத்து, பிற தொற்றுநோய்கள் இலகுவாகத் தொற்றிக்கொள்ள வழிவகுக்கின்றது. எச்.ஐ.வி தொற்றுக்குட்பட்ட இரத்தம், விந்து, யோனித் திரவம், முன்விந்துத் திரவம், தாய்ப்பால் போன்ற உடல் திரவங்களில் உள்ள சீதச்சவ்வு அல்லது இரத்த ஓட்டத்துடன் ஏற்படும் நேரடித் தொடர்பினால் இந்த வைரசானது ஒருவரிலிருந்து வேறொருவருக்குத் தொற்றுகின்றது.
எச்.ஐ.வி. கிட்டத்தட்ட அனைத்து உறுப்பு மண்டலங்களையும் பாதிக்கிறது. எயிட்சு நோய் கண்டவர்களுக்கு காபோசியின் சதைப்புற்று, கருப்பை முகப்பு புற்றுநோய், நிணத்திசுப் புற்று என்றழைக்கப்படும் நோய் எதிர்ப்பு மண்டலப் புற்றுநோய் போன்ற புற்று நோய்கள் எளிதாகத் தாக்கும் தன்மை உள்ளது. கூடுதலாக எயிட்சு நோய் கண்டவர்களில் உடலளவிலாய நோய் அறிகுறிகளான காய்ச்சல், வியர்வை (குறிப்பாக இரவு நேரங்களில்) வீங்கிய சுரப்பிகள், நடுக்கம், தளர்ச்சி மற்றும் எடை குறைவு போன்றவை காணப்படும். அவரவர் வாழும் நிலப்பகுதியில் நிலவும் நோய் விகிதத்திற்கேற்ப எயிட்சு நோயாளிகள் பிரத்தியேக நோய்தொற்றுகளுக்கும் ஆளாகின்றனர்.

English

See acquired immune deficiency syndrome (AIDS).